பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சொல் கூட அவன் கூறவில்லை. அதற்கு மாறாக அவர்கள் மீது மிகுதியாக வஞ்சம் வைத்தான் அவர்கள் கைகளால் தான் விடுபட்டது தனக்கு அவமானம் எனக் கொண்டான். 5. மறைந்து வாழ்தல் ஆண்டுகள் பத்தும் இரண்டும் கழிந்து விட்டன; ஓர் ஆண்டு எங்கு வேண்டுமானாலும் வாழலாம்; ஆனால் மறைந்து வாழவேண்டும் என்பது விதித்த விதி. விராடன் நகர் அவர்களுக்குத் தக்கது எனப்பட்டது. ஊருக்குச் செல்லுமுன் அவர்தம் படைக்கருவிகளைப் புறங்காட்டில் வன்னிமரம் அதன் பொந்தில் பதுக்கி வைத்தனர். தருமன் கங்கன் என்ற பெயரில் அவ்வூரில் புகுந்தான்.