பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 வீமனும் அருச்சுனனும் 'தேளைக் கண்ட இடத்து அடிப்பதுதான் நல்லது: யாரோ எவனோ இழுத்துச் செல்கிறான்; பழி நமக்கு வராது; அவன் ஒழியட்டும்' என்று அறிவித்தனர். 'அவன் தீயவன் தான் அது நமக்கும் அவனுக்கும் உள்ள முறிந்த உறவு: அவன் நம் பழைய உறவினன்; அவனை மாற்றான் ஒருவன் வருத்துகிறான் என்றால் காப்பது நம் கடமை அது மட்டுமல்ல அபயம் என்று குரல் கொடுத்தால் அவர்களைக் காப்பது மறவர்தம் கடமை; போ முதலில் அவனை விடுவி' என்று அருச்சுனனை அனுப்பினான். துரியன் மீட்கப்பட்டான்; 'நன்றி' என்று ஒரு