பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கர்மம் தொலைவதில்லை. என்றும் கூறுவது உண்டு. காட்டுக்குச் சென்றாலும் துரியனின் தொல்லை தொடர்ந்து வந்தது. அதற்காக அங்கே அவன் பாடி வீடு அமைத்தான்; பாசறையில் தங்கி இருந்தான். அவன் தீய காலம் சித்திர சேனன் என்னும் கந்தருவன் இவனைக் கண்டு தேரில் கட்டி இழுத்துச் சென்றான். கன்னனால் அவனை எதிர்க்க இயலவில்லை மற்றவர்கள் உயிருக்கு அஞ்சி ஊர் போய்ச் சேர்ந்தார்கள். துரியன் அழுகுரல் காட்டில் எதிரொலித்தது; தருமன் கேட்டான்; தம்பியரை ஏவி 'அவனைக் காக்க' என்றான்