பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 அழைத்தான் துரத்தியும் பிடித்தான் வீமன் பார்த்தான்; பச்சைக் கட்டையால் விளாசுவது என்று பதைபதைத்தான். அவசரப் பட்டால் ஆபத்தாக முடியும், மறைந்து வாழ்வது இயலாதது ஆகிவிடும். வீமனும் திரெளபதியும் சேர்ந்து ஒரு திட்ட்ம் வகுத்துச் செயல்படுத்தினர். கீசகன் திரெளபதியால் பாழ் மண்டபத்துக்கு அழைக்கப்பட்டான். நள்ளிரவு; இருள் இடையிடையே கல் தூண்கள். சேலைகட்டிய மாது அவள் கீசகனுக்காகக் காத்து இருந்தாள்; கீசகன் அவசரப் பட்டான், சென்று அவளைத் தழுவினான்; மீசை முகத்தில் பொத்தியது: