பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 இரும்புக் கரம் அவனை இறுக்கியது; அவன் தறுக்கு அழிந்தது: சாவின் மடியில் அவன் தலை சாய்ந்தது. "பேய் அறைந்தது' என்று பேசினர் சிலர்: காந்தருவன் வண்ண மகளைத் தேடி வந்தவன் இவணைச் சுண்ணம் ஆக்கி விட்டான்' என்றனர் சிலர். கீசகன் மாண்டான் என்ற செய்தி அத்தினாபுரிக்கு எட்டியது. அவர்களுக்கு ஐயம் எழுந்தது; 'வீமனாகத்தான் இருக்க வேண்டும்' என்று சர்ச்சை எழுப்பினர். அங்கிருந்து அவர்களை வெளிப்படுத்துவது என்று திட்டம் போட்டனர். 'ஆண்டு ஒன்று முடிவதற்குள் அவர்கள் வெளிப்பட்டு விட்டனர்' என்று கூறிச் சட்டத்தின் பிடியில் அகப்படுத்தி