பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 பூமி ஆள்வர். அவர்கள் வான் ஆள்வர்; அவர்களை வானுலகுக்கு அனுப்புவது தக்கது' என்று கருத்து அறிவித்தான். கிருஷ்ணன் தூது அடுத்தது போர் முயற்சி, அதற்குமுன் மற்றும் ஒரு சிறு முயற்சி. பாண்டவர்களும் கண்ணனும் விவாதம் தொடங்கிப் பேசினர். 'மூன்று வழிகள் உள்ளன: ஒன்று தவம் செய்ய இமயம் செல்வது அடுத்தது ஆட்சி கேட்டு அவன் தந்தால் மீட்டுச் சென்று அதனை ஏற்பது: இரண்டும் சாத்தியம் இல்லை என்றால் வாத்தியம் முழங்கக் கொடியை உயர்த்திப் படை திரட்டுவது' என்று கண்ணன் முன் மொழிந்தான். 'உயிர்ச் சேதம் மித்திர பேதத்தால்