பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 'என் அண்ணன் சாதனைகள் அடடா அளக்கவே இயலாது; அன்று இறைவா என்னைக் காவாய்' என்று பாஞ்சாலி ஓலமிட்டாள்; வெகுளாதே! என்று அடக்கி வைத்தான்; காட்டுக்கு எம்மை அனுப்பி வைத்த அந்தக் கண்ணிலான் மைந்தனை மேல் வீட்டுக்கு அனுப்பி வைப்பேன்; நாட்டை நீ ஆள வழி வகுப்பேன்" என்றான். மேலும் தொடர்ந்தான். 'என் அண்ணன் சாதித்த சாதனைகள்: ஆகா இவன் போர் முடித்தான்; பாஞ்சாலி கூந்தல் முடித்தாள்: இளையவர் யாம் கூறிய வஞ்சினம் அவற்றை முடித்து வாகை சூடவைத்தான்; இவனைப் போல் இதுவரை யார் முடித்தார்கள்?" என்று இகழ்ந்து பேசினான். போரில் அவர்களை அழித்துத் துரியனை இறு கூறு ஆக்கி வெற்றி சூடுவது வீரம், அதை