பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 விடுத்து அவனுக்கு அடி வருடுவது; இதுவா வீரம்?" என்று வினவிக் கேட்டான். தருமன் அவனை அமைதிப் படுத்தினான்; 'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை; மண்ணுக்குப் போர் செய்வது கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவது ஆகும்; பிறரும் வாழவேண்டும்; நாமும் வாழவேண்டும்; அதுதான் நல்லது' என்று அறிவுரை கூறினான். அவனோடு மேலும் அவன் வாதிட விரும்பவில்லை 'கண்ணன் பாதம் சிவக்கத் தூது செல்லத் தேவை இல்லை; என்னை அனுப்புக, அவனை முடித்து வருகிறேன்' என்றான் கண்ணன் வீமனை அமைதிப்படுத்தினான்; அவனை அடுத்து அருச்சுனன் தன் கருத்தை உரைத்தான்.