பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 "மைக்குழலாள் மன்னர் அவையில் அரற்றிய நாள் அன்றும் எங்களை அடக்கி வைத்தாய்! இன்றும் எங்களை முடக்கி வைக்கிறாய்! என்று நாங்கள் எம் பகை முடிப்பது?' என்றான். நகுலன் மிகுதியாக எதுவும் பேசவில்லை. 'போரே தக்கது' என்று நறுக்கென்று நாநயத்தோடு உரைத்தான். சகாதேவன் சாத்திரம் அறிந்தவன் சரித்திரம் தெரிந்தவன்; நூல்பல கற்ற அறிஞன். கண்ணனை நோக்கிக் கருத்து உரைத்தான். 'நீ கருதுவது எதுவோ அதுதான் நடைபெறும் என்று உரை தந்தான். கண்ணன் அஞ்சினான்; 'அவன் அபாய அறிவிப்பு' என்பதை அறிந்து கொண்டான்.