பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 அவனைத் தனியே அழைத்து அதற்கு விளக்கம் கேட்டான். "நீ இந்த உலகத்தில் தீமையை ஒழிக்கப் பிறந்திருக்கிறாய்; ஆக்கம் எது என்பதை நன்கு அறிந்தவன் நீ; இந்த உலகம் அழிவு விளிம்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது; அறிவு ஒளிமங்கிவிட்டது; ஆன்மீகம் தோற்றுவிட்டது. அழிவுகள் பெருகிவிட்டன்: ஒரு புதிய உலகம் அமைக்கப் போகிறாய்; அழுகிப்போன பழங்கள்; உலர்ந்து போன காய்கள்; இவற்றைத் தூக்கி எறிவதுதான் மாற்றத்துக்கு வழி: புரட்சி தவிர வேறு வழியே இல்லை. போர்கள் தவிர்க்க இயலாது; முட்டி மோதிக் கொண்டு சாகத்தான் போகிறார்கள் அதற்கு நீ காரணன்