பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 இடையன் மகன் அவனுக்கு இடம் தந்தது ஏன்?" என்று சாடினான். பேச்சு முற்றியது; விதுரன் தன் கைவில்லை முறித்துப் போட்டான் 'நீ எக்கேடு கெட்டால் எனக்கு என்ன? போருக்கு நான் துணையாகேன்' என்று உறவு முறித்துக் கொண்டான். அடுத்தது கண்ணன் துரோணன் மகன் அசுவத்தாமனைச் சந்தித்தான். அவன் பார்க்கும்படித் தன் கைமோதிரத்தைத் தரையில் நெகிழ்த்தான். அதை அவன் எடுத்துக் கொடுத்தான்; பின் வானைச் சுட்டிக் காட்டிச் 'சூரியனை ஊர்கோள் சுற்றுகிறது' என்று காட்டினான்.