பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 'அவன் கையில் அசுவசேனன் என்ற நாகம் அத்திரமாக உள்ளது; அதை அருச்சுனன் மீது இரண்டாவது முறை ஏவக்கூடாது; இது முதல் வரம், அடுத்தது தம்பியர் தலைகளை அவன் கொய்தல் கூடாது; அவர்களைப் போரில் கொல்லுதல் கூடாது; இந்த இரண்டையும் கேள்' என்று சொல்லி அனுப்பினான். அதில் அவள் வெற்றியும் பெற்றுச் சாதித்து முடித்தாள். அடுத்தது இந்திரனை அழைப்பித்தான். அருச்சுனன் இந்திரன் மகன் அதனால் அவன் பாசத்தைத் துண்டிச் செயல்படுத்தினான். இந்திரன் கண்ணனிடம் ஒரு அந்தணனாகச் சென்றான். அவன் கவச குண்டலங்களை யாசித்துப் பெற்றான்; பின் கண்ணன் நாடு திரும்பினான்.