பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 7. போர் நிகழ்ச்சிகள் இரு திறத்துப் படைகள் பொருகளத்தில் நின்றனர். அணிவகுத்த படைகளுக்குத் தளபதிகள் தனித்தனி ஆயினர். துரியன் அவனுக்குத் துணைவர் மிகுதி; தலைமைக்குத் தகுதி அவர்களுக்குள் உட்போர் மிகுதி. யார் தலைமை தாங்குவது? இதுவே அவர்கள் கேள்விகள்; ஒருவர் தலைமையில் மற்ற எவரும் பணிசெய்ய மறுத்தனர். போர் என்பது கூட்டுச் செயல்: ஒட்டு மொத்தமாக நின்று தாக்கி இருந்தால் வெற்றி இவர்கள் பக்கம் அமைந்து இருக்கும். வெற்றியை விட அவரவர் பதவிகளுக்குப் போட்டி இட்டனர். இதுவே அவர்களுக்குச் சரிவு தந்தது. எதிர் அணியில் இருந்த முதியவர்கள்; அவர்களை அருச்சுனன் தன் தேரில் இருந்து பார்த்தான்; அருகில் கண்ணன் தேர்ச்சாரதி.