பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 அருச்சுனன் அம்புக்கு அவன் இரையானான் அசுவத்தாமனைக் கண்ணன் ஏற்கனவே பிரித்து விட்டான், விதுரன் வில்லை இறுத்து முறித்து விட்டான். படைத் தளபதிகள் கருவம் மிக்கவர்கள் வீரம் பேசுவதில் விவேகம் இழந்தனர். எஞ்சி நின்றவன் துரியன்; அவன் மட்டும் அஞ்சவே இல்லை. அழிவு அவனுக்கு விழிப்பு ஏற்படுத்தவே இல்லை; வளையாத நெஞ்சு. போர்க்களத்தில் தன் படைகளைப் பலிகொடுத்தான்; உடன் பிறந்தவர்களை ஒழித்து முடித்தான்; சகுனி சாம்பல் ஆயினான். இறுதியில் அவன் பித்தம் பிடித்தவன் ஆயினான்; களத்தை விட்டு நீங்கி ஒரு குளத்தை அடைந்தான்