பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 ஒருமுறை ஏவிய அம்பு அது தப்பியது. அதுநாக அத்திரம்: மறுமுறை ஏவும்படி அது மன்றாடியது: அவன் தேர் ஒட்டி சல்லியனும் அதே கருத்தைக் கூறிப் பார்த்தான். கன்னன், 'அது வீரத்துக்கு இழுக்கு" என்று மறுத்துவிட்டான். சல்லியன் அவனிடம் முரண் கொண்டு தேரினின்று விலகிவிட்டான் தேர்ச் சக்கரம் ஒன்று தரையில் ஆழ்ந்தது. அதைத் தாங்கிப் பிடித்துத் திணறி நின்றான். தருமம் அவன் உயிரைக் காத்து நின்றது. அதையும் கண்ணன் தூண்டுதலில் இந்திரன் வந்து இரந்து அதனைப் பெற்றுக் கொண்டான்.