பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 அவன் தன் மகன் அசுவத்தாமன்தான் இறந்துவிட்டான் என்று சோர்ந்து வில்லைத் தரையில் போட்டுச் செயலற்றான். அந்த நேரத்தில் திட்டத்துய்மன் அவனைத் தீர்த்து முடித்தான். துருபதன் வஞ்சினம் நிறைவேறியது. அபிமன்யு வீரன்; அவனை எதிர்த்துப் போரிடக் கவுரவர் அஞ்சினர்; பின் வாங்கினர். அவனை வியூகம் அமைத்து வீமனிடம் இருந்து பிரித்தனர். தனியே அவன் அகப்பட்டுக் கொள்ளக் கிருபன் கன்னன், சயத்ரதன் இவர்கள் கூடி அவனை அழித்து ஒழித்தனர். கன்னன் இறுதியில் களம் வந்தான்;