பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 அந்த அம்புகள் அவன் மார்பில் தைத்தன; முட்கள் போல் அவை நிரைத்தன; அவன் மரணப் படுக்கையில் பல நாள் கிடந்து இறுதியில் உயிர் விட்டான். அடுத்தது துரோணன் அவனைக் கொல்வதும் இயலாதது ஆகியது. அவன் பாசமகன் அசுவத்தாமன் 'அவன் இறந்து விட்டான்' என்று ஒருபொய் தருமனைக் கொண்டு சொல்லுவித்தான் கண்ணன். வாய்மை குன்றாத தருமன்; அவனே நேர்மை குன்றினான். 'அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது' என்று மெய் நிகழ்ச்சி ஒன்றைக் கூறினான். கண்ணன் ஊதிய சங்கு ஒலி இந்தச் சொல்லை அழித்து விட்டது.