பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 காசி நகரத்து அரசன் அவனுக்கு மூன்று பெண்கள்; மூத்தவள் அம்பை, அவள் வீடுமனை விரும்பினாள் மணம் செய்துகொள்ள வேண்டினாள். அவன் மறுத்து விட்டான். அவள் வீர சபதம் எடுத்தாள், ஈரமின்றி அவனைக் கொல்வது என்று உறுதி கொண்டு நின்றாள்; சிகண்டி என்று தன் பெயர் மாற்றிக் கொண்டாள். விசயனின் தேரில் ஏறி இருக்க இடம் பெற்றாள்; அங்கிருந்து அவள் தொடர்ந்து அம்புகள் வீடுமனை நோக்கி மழையெனப் பொழிந்தாள். அவை ஒருபெண் ஏவியவை என்பதை அறிந்தான் வீடுமன்; பெண்ணைக் கொல்வது வீரமன்று; எதிர் தாக்குதல் இழிவு எனக் கருதினான்.