பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 தீயவன் தவறு செய்தான்; அவனைத் துணிந்து தடுக்க மறந்தவர்கள்' இந்தச் சிந்தனைகள் அவனுக்குத் துணிவு தந்தன; அவர்களைக் கொல்லுவதற்கு வில்லும் அம்பும் கைகளில் எடுத்தான் களம் களை கட்டியது. யார் யார் எப்படிச் சென்றார்கள்? எப்படிக் கொன்றார்கள்? ஒரு பரணியே பாடமுடியும். பதினெட்டு நாட்கள் தொடர்ந்து போர் நடத்தத் தினம் ஒரு தலைவன். வீரம் மட்டும் அங்கு விளையாடவில்லை; சூழ்ச்சிகள் தலைஎடுத்தன. வீடுமனை வெல்வது எளிதாகப் படவில்லை; சிகண்டி என்பவள் அவனைக் கொல்வது என்று சூள் உரைத்து இருந்தாள்.