பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 செயல்படு: எடு வில்' என்றான். இந்த அறிவுரைகள் அவன் மனநோய்க்கு மருந்து ஆயின. சோர்வுகள் நீங்கின; அச்சம் தவிர்ந்தான். இறப்பு அவனை அச்சுறுத்தவில்லை. இரக்கம், கருணை அவை மறைந்து நீங்கின. அழுகிப் போன பழங்கள் ل (6 (68 ويكي கூடைகளில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அவற்றைத் தூக்கி எறிய முற்பட்டான். இந்த முதியவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அநீதிக்குத் துணை நின்றார்கள். எதிர்க்க அஞ்சியவர்கள்; அறத்தைக் கைவிட்டவர்கள் வெறும் பூசணிக்காய்கள்; போட்டு உடைக்க வேண்டியது தான்.