பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 உனக்கு என்று ஒரு கடமைய நீ தேர்ந்து எடுத்துக் கொள்கிறாய்; பின்பு அதை நெகிழவிடக் கூடாது தப்பி ஓட நினைப்பது தவறு. தப்பித்துச் செல்லுதல் பொறுப்பை விடுதல் அது இறை நெறி அன்று. போராடு; வெற்றி காணச் செயல்படு: விளைவு அது அதுவே தேடிக் கொள்ளும். நேற்று அவன் ஆசான்; இன்று அவன் பகைவன் நேற்று அவன் பாட்டன், இன்று அவன் எதிரி. உயிர் அழிவுகள் அதற்கு அஞ்சுபவன் கோழை; அறிவு அற்ற ஏழை; நீ வீரன்; உன் நரம்புகள் உறுதி பெற்றவை: