பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 என்னை நீ வென்றால் அதுபோதும் வென்ற நாடு முழுவதும் உனக்கே தருவோம்; உனக்கு அடிமையாவோம்' என்று ஆசை காட்டினான்; துரியன் உயிரைவிட அடையும் நன்மைக்கு மதிப்புத் தந்தான்; 'வீமன் சமவலியன் தனித்துப்போரிடுகிறான்; வெல்ல முடியும்' என்று நம்பிக்கை கொண்டான் கரை ஏறிய அவனுக்குக் களம் குறித்தனர். மற்போர் தொடங்கியது: அதற்கு முடிவு ஏற்படவில்லை. கதைப் படை கொண்டு தாக்கிக் கொண்டனர். வெற்றி தோல்வி எதுவும் முடிவு ஆகவே இல்லை. இருவரும் வாய்விட்டுப் பேசினர் "உன் உயிர்நாடி உள்ள இடம் எது?" என்று துரியன் கேட்டான்.