பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 நெற்றி என்றான் வீமன் அடி நெற்றியில் பட அவன் ஏற்று விழுந்தான். மறுபடியும் அடித்துக் கொண்டனர்; 'உன் உயிர் நாடி எங்கே?' என்று வீமன் கேட்டான்; அதற்கு 'நெற்றியே' என்று அவன் வெற்றுரை தந்தான், அடித்துப் பயன் இல்லை; அவன் துடித்து விழவில்லை; கண்ணனுக்கு உண்மை தெரியும் விசயன் கேட்டுத் தெளிந்தான் 'வெற்றி" என்று தொடையைத் தட்டித் தமையனுக்குக் காட்டினான். குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம் என்பர் வீமன் குறிப்பு உணர்ந்து குறிவைத்தான். கதை கொண்டு அவன் தொடைச் சதையைத் தாக்கினான்; கவிதை யாப்புக் கட்டுப்பாடு இன்றிச் சிதைந்து சீரழிந்தது. தொடை அவன் உயிர்நாடி