பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 அது நடுங்கியது; அவன் வலி ஒடுங்கியது; குருதி அவன் கொடுமையைப் போல் பீறிட்டு வெளிப்பட்டது. வீமன் தன் வஞ்சினம் முடித்தான். மற்றவர்களும் போரில்தம் சூள் உரைகளை முடித்துத் தந்தனர் வீரமகள் துருபதி வீறிட்டு எழுந்தாள். களத்தைப் பார்த்துக் கண் சிவந்தாள். அவன் குருதி கண்டு உள்ளம் குளிர்ந்தாள். அவள் வெறி அடங்கியது. "அந்தக் குருதியைத் தீண்டுவதும் குரூரம், தகாது' என விட்டாள். அவள் தன் விரித்த கூந்தலை வாரி முடித்தாள், சூள் முடித்தாள் போர் முடிந்தது. ஆட்சி பாண்டவர் கைக்கு வந்தது. அவர்கள் காலமும் முடிந்தது. அபிமன்யுவின் ஒரே மகன் பரீட்சித்து அவன் அந்த வமிச வாரிசு ஆயினான்; அரச வமிசம் தொடர்ந்து நின்றது.