பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 அவள் பூமியின் பொறுமையைத் தாங்கியவள் ஆறி அடங்கிய கற்பினள் இவள் சீறிச் செயிர்த்தெழுந்த சினவேங்கை கொதித்து எழுந்த எரிமலை, காளி. வேள்வித் தீயில் அவள் உதித்தாள் என்பது கதை, அது உருவகம், வீர சபதத்தில் அவள் உருவானவள் என்பது அதன் உள்ளடக்கம். இந்தக் கதைமாந்தர்கள் பிறப்புகள் அவற்றின் தொடக்கம் மறை பொருளாக இருந்தன. இவள் வளர்ப்பு மகள்: இவள் உடன் பிறந்த சகோதரன் திட்டத்துய்மன் அவனும் வளர்ப்பு மகன்; இருவரையும் வேள்வித் தீமுன் தத்து எடுத்தனர்; அவர்கள் மண்ணின் மக்கள்; விண்ணில் இருந்து உதித்த நட்சத்திரங்கள் அல்ல.