பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கன்னன் எதிர்க்க எழுந்தான்; 'அந்தணர்களோடு போரிடுவது செந்தண்மை ஆகாது" என்று தத்துவம் பேசித் தன் மகத்துவம் அடங்கினான். அவரவர்கள் விரலை மூக்கில் வைத்து வியப்புத் தெரிவித்தனர்; "இவர்கள் அந்தணர்கள் அல்லர் அரச மரபினர் தாம்' என்று முணுமுணுத்துத் திரும்பினர். குந்தி வரவேற்றல் மூத்தவன் தருமன் அவன் கையகத்து அவளை ஒப்படைத்து அருச்சுனன் பகைக் களத்தில் நிலைக்களனாக நின்றான். உடன் வீமனும் துணையாயினான். சூறாவளி வீசியது: எங்கும் செடி கொடிகளைத் தூக்கி எறிந்து விட்டுச் சலனமற்று அது அமைந்து ஓய்ந்தது. ஐவராக அங்குச் சென்றவர் அறுவராக வீடு திரும்பினர். வில்லேந்திக் கனியை உதிர்த்தவனுக்கா பறித்து அதனைத் தாங்கிய நிலக்