பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 துரியன் துடித்து எழுந்தான்; எதிர்ப்புக் கொடி தூக்கினான்; "எங்கிருந்தோ வந்தான் எரிதழல் ஒம்பும் அந்தணன்: புரோகிதனாக இருக்கத்தக்கவன். இடம் மாறி அமர்வதால் மன்னர் மகன்கள் கைபிடிக்க வேண்டிய காரிகை அவளைப் பேரிகை கொட்ட வேற்று ஆள் அவன் வந்து மணம் முடிப்பதா! நீங்கள் அரசர்கள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட வேண்டும்; சூடு சுரணை இவை எல்லாம் எங்கே போய் விட்டன? எழுங்கள் விழித்து எழுங்கள்! அவனை ஒழித்துக் கட்டுங்கள்' என்று வெடிபடப் பேசினான். முடங்கிக் கிடந்த முள்ளங்கி பத்தைகள் முருங்கைக் காயாக நிமிர்ந்து நின்றனர். அவன்முன் இந்தப் புடலங்காய்கள் வெடவெடத்து நடுங்கி ஒட்டம் பிடித்தனர்.