பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நூல் அணிந்த மார்பன் அருச்சுனன், வேல் ஏந்தும் மன்னர்போல் வில் தாங்கி நின்றான். அம்பு எடுத்து அதனை நாணில் பூட்டி வளைத்து எய்து குறிபார்த்து அந்த இலக்கினை வீழ்த்தினான்; மீன்துள்ளிக் கீழே விழுந்தது. அதை அள்ளி எடுத்துக் காட்டினான். மாலை ஏந்திய நங்கை "மாவீரன் அவன் யார்? எவன்?' என்ற வினா ஏதும் தொடுக்காமல் காந்தம் போல் அவனை அடைந்தாள். மாலை அவள் கரத்திலிருந்து நீங்கி அவன் சிரத்தில் விழுந்தது. அவன் மணாளன் ஆயினான். வீரர்கள் வியந்தனர்; மன்னர்கள் மயங்கினர்; 'மறைஒதும் அந்தணன் கறை எதும் இல்லாமல் அவளைக் கரம் பற்றுகிறான்' என்பதால் அவர்கள் சிரம் தாழ்ந்தனர்; வெட்கப்பட்டனர். வேதனைப்பட்டு வெம்பினர்.