பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தாய் சொல்லியது தெய்வவாக்கு என்று சிந்திக்கத் தொடங்கினான். அவனுக்கே ஒரு சபலம் தட்டியது; அவனுக்கு மணம் செய்து கொள்வதில் ஆசையும் அரும்பியது. அருச்சுனனே அவனிடம் ஒப்புவித்துக் களம் சென்றான். கனி பறித்தவனுக்கு உரிமை அன்று, தரித்தவனுக்கு மூத்தவனுக்கு அவனுக்கு முன்னுரிமை; அதனால் அவன் அதனை மறுக்கவில்லை. துருபதன் அழைப்பு பூவையைப் பெற்ற பூபதி துருபதன் அவர்கள் பாண்டவர்கள்தாம் என்பதை ஒற்றரை அனுப்பி அறிந்து கொண்டான். 'ஐவரும் அவளை மணக்கிறார்கள்" என்பது அவனுக்கு அருவெறுப்பைத் தந்தது; தயங்கினான். எதற்கும் மகளைக் கேட்டு முடிவு செய்வது