பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 என்று அவளை அபிப்பிராயம் கேட்டு அறிய முனைந்தான். தருமனைப் பார்த்தாள்; அவனை அவள் விரும்பினாள். தக்கவன் என்று அவள் மனம் கொண்டாள்; மறுப்பு அறிவிக்கவில்லை. குந்திக்கும் கணவன் ஒருவன் தான்; என்றாலும் அவளுக்குத் தெய்வங்கள் தலைவர்கள் ஆயினர்; முன் மாதிரி கண்முன் நின்றது. தாய் தந்த வார்த்தை ஐவரும் ஏற்றுக் கொண்டனர்; அவளுக்கும் தடை ஏற்படவில்லை; எனவே துருபதன் தடுப்பதற்கு வழி இல்லாமல் போயிற்று. மற்றும் அவன் நோக்கம் அவர்கள் உறவு வேண்டும்; அருச்சுனன் தன் பக்கம் இருந்து துரோணனை வீழ்த்த உதவ வேண்டும்; அது அவன் வேட்கை துரோணன் துருபதனின் பகைவன்; அவர்கள் இருவரும் பாலிய நண்பர்கள்;