பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பகல் வேளைச் சாப்பாட்டைப் பங்கிட்டுக் கொண்டவர்கள்; பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இவன் பணக்காரப் பையன்; அவன் பிற்பட்ட வகுப்பினன்; அதாவது அந்தண சாதியன்: வருவாய் மிகுதிப் படாதவன்; உள்ளம் கலந்து பழகிவிட்டனர். இவன் கந்தல் வேட்டி அவனைச் சிந்திக்க வைத்தது; 'நாடு பிற்பாடு பாதி தருகிறேன்" என்று வாய்தவறிக் கூறிவிட்டான்; அதை அவன் அப்பொழுதே மறந்தும் விட்டான். காதல் உரை தரும் இளைஞனைப் போல். துரோணன் அவன் மணவாழ்வு சுமையாகியது: வறுமை பிடுங்கித் தின்றது. அசுவத்தாமன் பிறந்தான். குழந்தைக்குப் பசும்பால் வாங்கவும் வசதி இல்லை; குசேலர் கதை நினைவுக்கு வந்தது. இந்தக் குபேரனைக் காணச் சென்றான்;