பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 ஆடம்பர வாழ்வு: இந்தத் திகம்பரன் சென்றது அவனுக்கு அருவெறுப்புத் தந்தது. பாதி நாடு கேட்டான்; அவன் இவன் பாகஸ்தன் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டான். "வறுமை தீரத் தனக்கு வாழ்வு வேண்டும்' என்று தாழ்வுபடக் கேட்டான்; அவன் செவிகள் செவிடாகச் செயல்பட்டன. அன்று அவன் எடுத்த சூள்உரை; அதற்காகத் தான் அருச்சுனனுக்கு ஆசிரியன் ஆயினான். அரங்கேற்றம் முடிந்தது: வில்வித்தையில் விறலோன் என்ற சிறப்பு எய்தினான் அருச்சுனன். ஆசிரியனுக்கு மதிப்புச் செய்ய மாணவன் விரும்பினான்; அதற்குக் குருதட்சணை என்று பெயர் வழங்கினார்கள்.