பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 'துருபதனை வென்று அவனைத் தேரில் கட்டி இழுத்து வா' என்றான் துரோணன், அதனை அருச்சுனன் செய்து முடித்தால், அன்று துருபதன் எடுத்த சூள் உரை, அருச்சுனனைத் தன் மருமகனாக ஏற்பது: அவனைக் கொண்டு தான் நினைத்தது சாதிப்பது: திரெளபதி அவன் பெற்ற மகள் அல்லள்; எங்கோ யாரிடமோ இருந்து எடுத்து வளர்க்கப்பட்டவள்; மற்றும் அது அவள் வாழ்க்கை விவரம் அது அவள் முடிவு செய்து கொள்ள வேண்டுவது ஐவரை மணக்க அவன் மறுப்புக் கூறவிலலை. விவாகமே விசித்திர மாக நடைபெற்றது: மணமேடையில் முதலில் தருமன் அமர்ந்தான்; அருகில் திரெளபதி.