பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சடங்குகள் நடந்தன. அவள் கழுத்தில் தாலி ஏறியது. அவள் தருமனின் தருமபத்தினி ஆயினாள். அடுத்தது வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஐவரும் கட்டிய தாலிகள் அவள் கழுத்தை அலங்கரித்து அழகுபடுத்தின. 'ஐவருக்கும் தேவி அவள் அழியாத பத்தினி" என்ற பெயர் நிலைத்தது. ஒருத்திக்கு ஐவர் கணவர் என்பது அவள் ஆரம்ப வாழ்க்கை; பிறகு மெல்ல மெல்ல அவர்கள் மனம் மாறினர் திருந்திய வாழ்க்கை பெற்றனர்; அவள் தருமனுக்கே மனைவி என்பது நடைமுறை வாழ்க்கை ஆகியது. தவறுகள் நடக்கலாம்; ஆனால் அவற்றைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.