பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அவள் பெயர் உருக்குமணி, அவள் தமையன் உருக்குமன்; சிசுபாலனின் நண்பன் அவளைச் சிசுபாலனுக்கே கட்டுவது எனக்கட்டுப் படுத்தினான் கண்ணன் அவளைத் தேரில் ஏற்றிக் கொண்டு உடன் கொண்டு சென்று விட்டான். அதனால் சிசுபாலனுக்கும் கண்ணனுக்கும் தீராப் பகை நிலைத்து இருந்தது. கண்ணனுக்கு அந்த ஏற்றம் தர அவன் மறுத்தான்; இகழ்வுரை பேசி அதனைத் தடுத்து எதிர்த்தான். "இவன் பிறந்தது எட்டாவது: முன் பிறந்தவர்கள் எழுவரின் சாவுக்கு இவனே காரணம் ஆவான். "இவன் பிறந்தது சிறைக் கூட்டிலே; வளர்ந்தது இடையர் பாடியில்; பிறப்பில் சிறப்பு இல்லை; வளர்ப்பில் உயர்வு இல்லை.