பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 கன்னன் சகுனி, துரியன் தம்பியர், மற்றும் பல மன்னர்கள் வந்து குழுமினர். விழாவுக்குத் தலைமை தாங்குவது யார்? அதற்கு உரிய தகுதி பற்றிப் பேச்சு வந்தது. கண்ணன் மதிக்கப்பட்டான்; அறிஞன், வாழ்க்கையின் பலபடிகளையும் கண்டவன். திருதராட்டிரன் அந்த விழாவுக்கு வரவில்லை; வீடுமன் வந்திருந்தான்; அவன் கண்ணனே தலைமைக்குச் சால்புடையவன்' என்று முன்மொழிந்தான். எதிர்ப்பு இல்லை; அதனால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிசுபாலன் கண்ணனுக்கு எதிரி; உறவுக்காரன்; அவன் புழுக்கம் கொண்டான். விதர்ப்ப தேசத்து அரசன் பீஷ்மகன் தன் மகளைக் கண்ணனுக்குத் தர - விருப்பம் கொண்டிருந்தான்.