பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 புல் ஒன்றைப் பிளந்து தலைகீழாக மாற்றிப் போட்டான், அந்தக் குறிப்பை அறிந்து அவனைப் பிளந்து தலைகீழாக மாற்றிப் போட்டான்; அவன் உடல் ஒட்டவில்லை; உயிர் பட்டு விட்டது. அது அவர்கள் சாதித்த பெரு வெற்றி: இடும்பன், பகன் இவர்களோடு இவன் மூன்றாவது ஆளாக வீமனுக்கு அமைந்தான். இராசசூயயாகம் இனி போர்கள் ஒழிந்தன; வேள்வி தொடங்குவது என்று ஏற்பாடுகள் செய்தனர். தருமன் யாக வேள்வியில் தலைமை ஏற்றான்; அவனோடு மேடையில் திரெளபதி அமர்ந்து சிறப்பித்தாள். அவள் தருமனின் யாக பத்தினியாக உயர்வு பெற்றாள். மன்னன் துரியன் அழைக்கப்பட்டான்;