பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 அஞ்சித் துவாரகைக்கு ஓடிவிட்டவன்' என்றான். 'அருச்சுனன் இளையன் மற்போருக்கு ஆகான்' என்று அவனை ஒதுக்கினான். திடமான உடலும் போர் செய்யும் அடலும் கொண்ட மல்லன் வீமன் என்பதால் அவனை மற்போருக்கு அழைத்தான்; அதற்காக ஒரு களம் குறித்தான்.' சராசந்தனை யாரும் வெல்ல முடியாது. அவன் உடற்கட்டு வெட்டுக்கு மாளாது: இருவரும் கட்டிப் புரண்டனர்; உயரத் தூக்கி எறிந்து பந்தாடிக் கொண்டனர்; அவன் உடலைக் கிழித்துப் போட்டாலும் ஒட்டிக் கொண்டது: வழி தெரியாமல் திகைத்தான். கண்ணன் நடுநிலைமை பிறழ்ந்தான்; அவனுக்குச் சைகை காட்டினான்.