பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கண்ணன் தன்னுடன் வீமனையும் அருச்சுனனையும் அழைத்துச் சென்றான். அரண்மனை உள்ளே செல்ல அனுமதி இல்லை. அந்தணர் வேடத்தில் சென்றால் தடை செய்ய மாட்டார்கள். மூவரும் முந்நூல் அணிந்து, சிகை முடித்துக் கொண்டு, பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு, பார்ப்பனராய் உள்நுழைந்தனர்; சராசந்தன் பார்வையில் பட்டனர். நீலநிற வண்ணன், கண்ணன்; அவனை அவன் அடையாளம் கண்டு கொண்டான். அவனை வைத்து மற்றவர்கள் வீமன் அர்ச்சுனன் என்பதையும் அறிந்து வினவினான். அவர்கள் தோள்களில் தழும்பு இருந்தன; விற்போர் மற்போரில் வல்லவர்கள் என்பதை அவை அறிவுறுத்தின. கண்ணனை இகழ்ந்து பேசினான், 'அவன் உயிருக்கு