பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 கட்டி முடிந்ததும் புதுமனை புகுவிழா நடத்தத் தீர்மானித்தனர். அதற்கு முன் தம் வெற்றிப் புகழை எட்டுத் திக்கும் நிலை நாட்ட விரும்பினர்; அதற்காக அரசுப் பெருவிழா அதற்கு ஒரு யாகம் நடத்த விரும்பினர்; மன்னர்களை அடிமைப்படுத்தி அவர்களிடமிருந்து திரைப் பணம் பெற்றனர்; சக்கரவர்த்தி என மதிக்கப்பட்டனர். சராசந்தன் வதம் அட்டதிக்கும் சென்று எதிர் பட்ட மன்னர்களை வென்று அவர்கள் கொட்டித் தந்த பொருளைக் கொண்டு வந்து குவித்தனர். கண்ணனுக்கு ஒரு பகைவன்; அவன் ஆற்றல் மிக்கவன்; சராசந்தன் என்று அழைப்பர்; அந்தப் பகையை முடிக்கக் கண்ணன் கருதினான். சராசந்தனை அவன் நகருக்கே சென்று அவனை எதிர்த்துப் போரிடுவது என்று கருதிச் சென்றான்.