பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நாடு திருத்தி நகர் அமைத்தனர், அதில் தப்பிப் பிழைத்த சிற்பி மயன் தன் நன்றிக் கடனாக அழகிய மண்டபம் கட்டித் தரத் தன்னை இயைபுபடுத்திக் கொண்டான். விட பருவன் என்னும் அசுரன் கொள்ளை அடித்து ஒரு பொய்கையில் குவித்து வைத்த மணிகள் பொன் இவற்றை அள்ளிக் கொண்டு வரச் செய்தான். மயன் தன் சிற்பநூல் புலமையால் திறன்மிகு ஆட்களைக் கொண்டு மின்னல் என்று ஒளிவிடும் மண்டபத்தைக் கட்டித் தந்தான். மண்டபம் அமைந்ததும் அதனை விருப்புற்றுக் காண விண்ணவர் குழுமினர்; மண்ணவர் திரண்டனர்; வித்தியாதரர் வியந்தனர்; "இந்திரன் அமைத்த அத்தாணி மண்டபம்' என்று இதனைப் பாராட்டினர்.