பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அவ்வப்பொழுது வெள்ளங்கள் மிகுந்து நெருப்பைத் தடுத்தது. எரியிட்டுக் கொளுத்துவது அரிய சாதனையாக இருந்தது; அங்கே அசுர தச்சன் ஒருவன் மயன் என்பான் தங்கி இருந்தான்; அவன் உயிருக்குக் காப்பு அளித்தான். மற்றும் ஒரு நாகம் வேகமாக வெளியேறியது; அதன் வயிற்றில் ஒரு குட்டி, அர்ச்சுனன் ஏவிய அம்பு அந்த நாகத்தைக் கொன்றது: வயிற்றுக் குட்டி மட்டும் தப்பிப் பிழைத்துக் கொண்டது. பாம்பு கருவிக் கொண்டால் அதைத் தடுக்க முடியாது; அது அடித்தவரை விட்டு வைக்காது; காலம் கருதிக் காத்திருந்து கதையை முடிக்கும். தன் தாயைக் கொன்ற தனஞ்செயன் அவனைப் பழிவாங்க நினைத்தது: அதற்கு வழி என்ன என்று சிந்தித்துக் கன்னனை அடைந்தது: அவன் அதற்குப் பால்வார்த்து வளர்த்து வந்தான்.