பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அவர்கள் வாழ்ந்த பகுதி மரங்கள், செடிகள், முற்புதர்கள் சூழ்ந்த வனாந்திரம். இன்று "காடுகளைக் காக்க வேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்' என்ற குரல் எழுந்து உள்ளது. அன்று காடு திருத்தி நாடாக்கும் புதுவளர்ச்சி; நகர அபிவிருத்தித் திட்டங்கள்; அவற்றுள் இது ஒன்று. காட்டை அழித்து எரித்து ஒழிக்கும் பணி அவனிடம் தரப்பட்டது. காடு சென்று நெருப்பு மூட்டினான்; வனவிலங்குகள் தப்பி ஓடி வெளியேறின; அவை நகருக்குள் புகுந்தால் உயிருக்குச் சேதம். அதனால் அவற்றை மடக்கிப் போட்டு அங்கேயே அவற்றை மடிவித்தான். மழை விடாமல் பெய்யும் தண்ணீர் பிரதேசம் அது: