பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 அவன் நோக்கத்தையும் தெரிந்து கொண்டான். தங்கை சுபத்திரையை அங்கு அவனுக்கு வழிபாடு செய்ய அனுப்பி வைத்தான்; அவளோடு அவள் தோழி ஒருத்தியும் உடன் சென்றாள். சுபத்திரையின் தோழி அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்: 'அடிகளே! உங்கள் தல யாத்திரையில் ஓர் இளைஞன், அர்ச்சுனன்; அவனைக் கண்டீர்களா?' என்று கேட்டு வைத்தாள். சுபத்திரையும் உடன் இருந்தாள். 'சிவகாமி அந்தச் சிதம்பரம் நான் தான்' என்று வேஷத்தைக் கலைத்து விட்டுக் காவியன் காதலன் ஆயினான். இருவரும் தேர் ஏறிச் செல்லக் கண்ணன் துணைநின்றான்; அவளை அழைத்துக் கொண்டு இந்திரப் பிரத்தம் வந்து சேர்ந்தான். காண்டவ தகனம் நாடு திரும்பியதும் அருச்சுனனுக்குக் கடமைகள் காத்து இருந்தன;