பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அந்த வாழ்வில் அவன் பெற்றெடுத்த நன்மகன் பப்புருவாகனன் என்பது. அவன் மாவீரனாகத் திகழ்ந்தான். அடுத்தது துவாரகை, அருச்சுனனுக்குக் கண்ணன் மைத்துனன் உறவினன்; கண்ணன் தந்தை வாசு தேவனுக்கு ஒரு மகள்; அவள் பலராமன் தங்கை; ‘சுபத்திரை' என்பது அவள் பெயர். நித்திரையிலும் அவள் அருச்சுனன் பெயரையே சொல்லி வந்தாள்: அவன் தீர்த்த யாத்திரை சென்று உள்ளான் என்பதை அவள் அறிவாள். துவாரகை வந்த அருச்சுனன் காவி உடை அணிந்து துறவியாகக் காட்டிக் கொண்டான். அந்த ஊர்ப் பெண்கள் அவன் பாத பூசை செய்வதற்குக் காத தூர மிருந்தும் வந்து சேர்ந்தார்கள். கண்ணன் அருச்சுனனைக் கண்டு கொண்டான்;