பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 அவள் நாக உலகத்துக் கன்னி உலூபி என்பாள்; அழகிகள் தேவை என்றால் அங்கிருந்துதான் வரவழைக்கப் பெற்றனர்; அவர்கள் இளைஞர்களின் கற்பனைக் கன்னிகள். அவளோடு தொடர்பு கொண்டதால் விளைவு? நன்மகன் ஒருவனை அவள் பின் பெற்றெடுத்தாள், இரவான் என்பது அவன் பெயர். அதன்பின் அவன் பயணம் தென்குமரியாக அமைந்தது; தமிழ் இனிய மொழி: அவள் தமிழ் மகள் மதுரையில் சிந்திராங்கதையைச் சந்தித்தான்; காதல் கொண்டான். பாண்டியன் அவனை அழைப்பித்தான். அவன் ஆண்டிபோலக் காவி உடை அணிந்து சென்றான். 'குமரி ஆட வந்தேன் என்றான்; அதற்கு அரசன் ஒப்புதல் அளித்தான். அவன் அருச்சுனன் என்பதை அறிந்து தமிழ் மகளை அவனுக்கு மன்னன் பாண்டியன் மணம் செய்து வைத்தான்.