பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தருமன் அவளோடு உடன் இருந்தான் என்பதை அறிந்தான், அது அவன் மனத்தை உறுத்தியது அண்ணன் முகத்தில் விழிக்க அவன் விரும்பவில்லை; தான் உள் சென்றது தவறு என்பதை உணர்ந்தான். தவறுகள் அந்தக் காலத்தில் பாவச் செயல் என்று கருதப்பட்டன. அது தீரத் தீர்த்த யாத்திரை செய்வது பரிகாரம் என்று கருதப்பட்டது. அருச்சுனன் தீர்த்த யாத்திரை தொடங்கினான்; முதற்கண் அவன் நீராடியது கங்கைநதி, அதில் நீராடச் சென்றான். அங்கே அதில் குளித்து எழுந்த கன்னி 'அரைகுறை ஆடையில் ஒட்டிய சேலையில் அவன் உள்ளத்தைக் கவர்ந்தாள்; அவனோடு கலந்தாள்; அவன் அவளை மணந்தான்.