பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 அந்தப் புதிய நாட்டுக்குக் குடிபெயர்ந்தனர்; காடு திருத்தி அதனை நாடு ஆக்கினர். இந்திரன் நாட்டில் சிற்பியாக இருந்த விசுவகர்மனைக் கொண்டு நகர் ஒன்று நிருமாணித்தனர்; அதற்கு இந்திரப் பிரத்தம் என்று பெயரிட்டனர்; அருச்சுனன் தீர்த்தயாத்திரை அன்றாட வாழ்வில் ஒரு திருப்பம், அருச்சுனன் எதிர்பார்க்கவில்லை; கதவு உள் மூடப்படவில்லை. அவசரமாக உள் நுழைந்து அம்பும் வில்லும் எடுக்கச் சென்றான்; அவன் கவனிக்கவில்லை. மாலை நேரம்; இருள் கால் கொண்ட வேளை, அங்கே திரெளபதியின் சிலம்பு ஒலி கேட்டது: அது அவள் கால் அசைவில் ஏற்பட்ட சிருங்கார ஓசை,