பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 துரியன் அவர்கள் வலிமையை உணர்ந்தான்; "கூடிக் கெடுப்பது நாடத் தக்கது' என்று முடிவு செய்தான். தந்தை திருதராட்டிரன் அவன் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தான். அவர்களை அழைப்பித்துச் சிறப்புகள் செய்தான். மூத்தவன் தருமன் என்பதால் அவனுக்கு முடிசூட்டித் திருதராட்டிரன் ஆட்சி தந்தான். அவன் வீழ்ச்சியில் குளிர் காயும் குரூர மனம் படைத்த துரியன் அவர்களைக் கடத்தி வைக்கக் கருதினான். காண்டவவனம் என்ற காட்டுப் பகுதி, அங்கு அவர்களை அனுப்பி வைத்து அங்கு ஆட்சி நடத்துமாறு தந்தையிடம் கேட்டுக் கொண்டான்; அவனும் தலையாட்டினான்; அது அவன் தலைமைநெறி;