பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அவர்கள் கரை ஏறமுடியாமல் கரைந்து தவித்தனர்; நாணத்தின் கரையைக் கடக்க அவர்களைக் கையேந்தச் செய்தவன். கன்றை எறிந்து விளவினைச் சாடினான்; மாமனை மதித்து நடத்தாமல் வீமனைப் போல் அவன் மார்பில் ஏறிக் களிநடம் செய்தான்; குழல் ஊதிப் பசுக்களை அழைத்தவன் குழல் மாதரை அழவைத்து அவர்களை ஏங்க வைத்த செயல் தாங்க முடியாது. உருக்கு என்ற பெயரினள் அவளைத் தன்னோடு இறுக்கி வைத்துக் கொள்ள இழுத்துச் சென்றான். இவன் தீராத விளையாட்டுப் பிள்ளை; சேராது இவனுக்குத் தலைமை' என்று வற்புறுத்திக் கூறினான். 'குடிக்கு மூத்தவன் திருதராட்டிரன் பெரிய தந்தை, பாட்டன் வீடுமன்; - ஆசிரியன் துரோணன்; மாமன் சகுனி;